|
|
|
|
|
|
தமிழகத்தில் பாஜக வின் தொடக்கம்
1951 ஆம் ஆண்டு அக்டோபர் 21 தேதி பிறந்த ஜனசங்கம், பின்னர் 1977 ஆண்டில், திருமதி இந்திராகாந்தி அவர்களால் "அவசரநிலை பிரகடனம்" என்ற பெயரில் இந்திய ஜனநாயகத்தின் கழுத்து மிகக் கொடுரமான
முறையில் நெரிக்கப்பட்டபோது, இந்திய தேச மக்களின் நலன் ஒன்றையே நோக்கமாகக் கொண்டு செயல்பட ஜனதா கட்சியுடன் இணைந்தது. அதனால் ஜனதா கட்சியின் பரிசோதனைகள், வெற்றிப்பாதையை நோக்கிச் செல்லாத நிலையில் ஜனசங்கம் மீண்டும்
புதுப்பிறப்பெடுத்து ஏப்ரல் 6 தேதி 1980 வருடம் "பாரதிய ஜனதா கட்சி" என்று மலர்ந்தது. இப்புதிய தேசியக் கட்சியின் முதல் தலைவராக ஸ்ரீ அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்.
|
|
|